இந்தியாவில் திடீரென தங்கம்- வெள்ளிக்கு பற்றாக்குறை

இந்தியாவில் திடீரென தங்கம்- வெள்ளிக்கு பற்றாக்குறை
Spread the love

இந்திய சந்தையில் திடீரென தங்கம்வெள்ளிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெள்ளி சந்தை வரலாற்றில் முதல் முறையாக கையிருப்பு இல்லாமல் பெரிய பற்றாக்குறை ஏற்பட்டது. பண்டிகைக்கால தேவை மற்றும் உலகளாவிய முதலீட்டு அழுத்தம் ஆகியவற்றால் தங்கம் வெள்ளி சந்தையில் போதிய அளவு இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 தங்கம், வெள்ளி வங்கிகள் ஆர்டர்களை பூர்த்தி செய்ய முடியாமல் திணறின. சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, உலகின் மிகப்பெரிய விலைமதிப்பற்ற உலோக வர்த்தகர்களில் ஒருவரான மற்றும் இந்திய சந்தையின் முக்கிய சப்ளையரான JPMorgan Chase & Co., ஒரு வாடிக்கையாளரிடம் அக்டோபர் மாதத்துக்கான வெள்ளி ஒதுக்கீடுகள் தீர்ந்துவிட்டதாகவும், அடுத்த விநியோகம் நவம்பரில் மட்டுமே கிடைக்கும் என்றும் தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. 

MMTC-Pamp இந்தியாவின் வர்த்தகப் பிரிவின் தலைவர் விபின் ரெய்னா, இந்த திடீர் உயர்வுக்குத் தாம் தயாராகவில்லை என்று கூறினார். “வெள்ளி மற்றும் வெள்ளி நாணயங்களை வர்த்தகம் செய்யும் பெரும்பாலானவர்கள், கையில் சரக்கு இல்லாமல் இருக்கிறார்கள். இந்த வகையான சந்தையை எனது 27 வருட வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை” என்றும் ரெய்னா கூறினார். சமூக ஊடகங்களால் ஏற்பட்ட தாக்கத்தால் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சுமி தேவியை கொண்டாட லட்சக்கணக்கான இந்தியர்கள் வெள்ளி வாங்கத் தொடங்கியதால், அதற் கான தேவை அதிகரித்தது.

இந்தியாவில் மக்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது. தற்போது அது வெள்ளியின் பக்கமும் திரும்பியுள்ளது. இதன் காரணமாக வெள்ளியின் விலை அதிகரிக்க துவங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *