இந்திய அஞ்சல் துறையில் (India Post) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 17 பணியிடங்கள் உள்பட நாடு முழுவதும் மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இதற்கு தேர்வு கிடையாது. மெரிட் லிஸ்ட் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிகிரி முடித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய அஞ்சல் துறை என்பது நாட்டின் மிகப்பெரிய அரசு துறைகளில் ஒன்றாக உள்ளது. நாடு முழுவதும் தபால் சேவை மற்றும் போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி சேவைகளை இந்திய அஞ்சல் துறை வழங்கி வருகிறது.
அஞ்சல் துறையை பொறுத்தவரை மத்திய அரசுக்கு சொந்தமானது என்பதால் இதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம், சலுகைகள் உள்ளிட்டவை கிடைக்கின்றன. படித்து முடித்து அரசு பணி கனவுடன் இருக்கும் தேர்வர்கள் அஞ்சல் துறை வெளியிடும் தேர்வு அறிவிப்பினை ஆர்வத்துடன் எதிர்பார்த்து உள்ளனர். தேர்வர்கள் பெரிதும் எதிர்பார்த்த தேர்வு அறிவிப்பினை அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது.
பணியிடங்கள்:
ஜிடிஎஸ் எக்ஸிகியூட்டிவ்:
GDS as Executive at IPPB – மொத்தம் 348 காலிப்பணியிடங்கள் உள்ளன.
மாநில வாரியாக பார்த்தால் தமிழகத்தில் 17 பணியிடங்களும்,கேரளாவில் 06 பணியிடங்களும், கர்நாடகாவில் 19 பணியிடங்களும் என மொத்தம் 22 மாநிலங்களில் காலிப்பணியிடங்கள் உள்ளன.
அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தில் 40 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மண்டல வாரியாக பார்த்தால் தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், மானாமதுரை, சென்னை, உடையார் பாளையம், தல்லாகுளம், தேனி, சேரிங் கிராஸ், சேலம், திருவண்ணாமலை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகிய இடங்களில் தலா 1 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கல்வி தகுதி:
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அனுபவம் எதுவும் தேவையில்லை. விண்ணப்பதாரர்களுக்கு எதிராக வழக்குகள் நிலுவையில் இருத்தல் கூடாது. வயது வரம்பை பொறுத்தவரை 01.08.2025 தேதியிட்டு கணக்கிடப்படும். அன்றைய தேதியில் 20 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாதச் சம்பளம் எவ்வளவு?
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும். இந்திய வருமான வரி சட்ட விதிகளின் வரிகள் உள்ளிட்டவைகள் பிடித்தம் செய்யப்படும். சம்பள உயர்வை பொறுத்தவரை ஊழியர்களின் செயல் திறன் உள்ளிட்டவை அடிப்படையில் வழங்கப்படும்.
சம்பளத்தை தவிர இதர சலுகைகள் அதாவது போனஸ், அலவன்ஸ் எதுவும் வழங்கப்படாது. பணிக்காலத்தை பொறுத்தவரை ஓராண்டு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவார்கள். ஊழியர்களின் செயல்பாட்டில் திருப்தி இருந்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.
தேர்வு முறை:
டிகிரியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மெரிட் லிஸ்ட் தயார் செய்யப்பட்டு தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். எனினும், தேவைப்பட்டால் ஆன்லைன் டெஸ்ட் வைக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு அறிவிப்பினை நன்கு படித்து உறுதி செய்து கொண்ட பிறகு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
விருப்பம் உள்ள தேர்வர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். தேர்வுக்கட்டணம் எக்காரணம் கொண்டு திருப்பி அளிக்கப்படாது.
தேர்வு அறிவிப்பினை தொடர்பு:
