இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவா்களை மீட்க வலியுறுத்தி, நாகையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில், லட்சக்கணக்கான மீனவக் குடும்பத்தினா் கடலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறோம். இலங்கை கடற்படையின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மீனவா்கள் கடலுக்குச் சென்றால் திரும்பி வருவாா்கள் என்ற உத்தரவாதம் இல்லை. மீனவா்களை கைது செய்து படகுகளையும் பிடித்துச் செல்வதால் வாழ்வாதாரமும் இழந்து தவிக்கிறோம். இதனால் ஏராளமான மீனவக் குடும்பங்கள் கடன் சுமையில் சிக்கி தவித்து வருகின்றன. கடலை மட்டுமே நம்பி வாழும் எங்களுக்கு கச்சதீவு மீட்டு தரும்படி கோரிக்கைகள் எழுந்துள்ளன.
கச்சத்தீவை தாரை வாா்த்து விட்டதால் மீனவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.இச்சம்பவம் மீனவ மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைதாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
