இஸ்ரேலிய உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை

இஸ்ரேலிய உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை
Spread the love

ஜூன் மாதம் இஸ்ரேல் ஈரான் (இஸ்லாமியக் குடியரசு) மீது நடத்திய தாக்குதல்களில் கொல்லப்பட்ட அணு விஞ்ஞானி பற்றிய தகவல்களை இஸ்ரேலின் உளவுத்துறையான மொசாட்டிற்கு ரகசியமாக ரூஸ்பே வாடி கடத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக ஈரானிய நீதித்துறை செய்தி நிறுவனமான மிசான் தெரிவித்துள்ளது.

கடந்த மாதங்களில் ஈரான் இஸ்ரேல் நாடுகள் மிக பதட்டமாக காணப்பட்டது. மூன்றாம் உலகப்போர் மூலக்கூடும் என்று விவாதிக்கப்பட்டது. ஒருவழியாக அமைதி திரும்பியது என்றாலும் ஈரானில் உளவு பார்த்த, ஈரானுக்கு ஆதரவாக உதவி செய்த நபர்களை ஈரான் தேடி தேடி கைது செய்கிறது. அதன் தொடர்ச்சியாக இந்த வாரம் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட ரூஸ்பே வாடி ஈரான் மரணதண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மன்னிப்பு மேல்முறையீட்டை ஈரான் உச்சநீதிமன்றம் நிராகரித்த‌தை அடுத்து, கடந்த சனிக்கிழமை குவாம் நகரில் தூக்கிலப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஆயிரத்துக்கு அதிகமானவர்களை உளவு பார்த்தாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *