சிங்கப்பூர் பாஸ்போர்ட் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, இதனை தொடர்ந்து தென் கொரியா, ஜப்பான் ஆகிய ஆசியா நாடுகள் உள்ளன.
சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 12-வது இடத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தியா கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு முன்னேற்றம் அடைந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணிக்கலாம் என்பதை அடிப்படையாக வைத்து சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலிடப்படுகிறது. அதாவது, சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அளிக்கும் தரவுகளை வைத்து பிரிட்டனைச் சேர்ந்த ஹென்லே பாஸ்போர்ட் நிறுவனம் பட்டியலிடும் பணியைத் மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமை பெற்ற அமெரிக்கா, இந்தாண்டு மலேசியாவுடன் உடன் 12-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் உலகில் உள்ள 227 நாடுகளில் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
இந்த பட்டியலின் படி, இந்த ஆண்டு ஆசிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.
முதலாவது இடத்தில் சிங்கப்பூர்- (193 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்).
02-வது இடத்தில் தென் கொரியா-(190 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்).
03-வது இடத்தில் ஜப்பான்- (189 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்).
04-வது இடத்தில் ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்து.
05-வது இடத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து.
06-வது இடத்தில் கிரீஸ், ஹங்கேரி, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன்.
07 -வது இடத்தில் ஆஸ்திரேலியா, செக் குடியரசு, மால்டா, போலந்து.
08-வது இடத்தில் குரோஷியா, எஸ்டோனியா, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமீரேட்ஸ், பிரிட்டன்.
09-வது இடத்தை கனடா.
10-வது இடத்தில் லாட்வியா மற்றும் லிச்சென்ஸ்டீன்.
இந்த இந்த பட்டியலில் படி, சீனா 64-வது இடத்தில் உள்ளது. இந்தியா, 2006-இல்71-வது இடத்தையும், 2021-இல் 90-வது இடத்தையும், 2024-இல் 85-வது இடத்தையும் பிடித்த இந்தியா இந்த ஆண்டு 77-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 60 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
இந்த பட்டியலில் கடைசியாக 106-வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. அதற்கு முன்னர் 105-சிரியா, 105-ஈராக், 105-ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன. பாகிஸ்தான் 103-வது இடத்தையும், நேபாளம் 101-வது இடத்தையும் பிடித்துள்ளது. வங்கதேசம் 100-வது இடத்தையும், இலங்கை 98-வது இடத்தையும், மியான்மர் 96-வது இடத்தையும் பூடான் 92-வது இடத்தையும் பிடித்துள்ளன
