ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் குறித்து பல்வேறு கேள்விகளை குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவை தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் எழுப்பினார். விழாவில் பேசிய அவர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்கும் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா என கேள்வி எழுப்பினார்.
மசோதா தொடர்பாக முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு விதித்திருந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நாட்டின் மிக உயர்ந்த பதவியின் அரசமைப்பு அதிகாரத்தைக் குறைக்கும் வகையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்துள்ளார். உச்ச நீதிமன்றத்திற்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் 142ஆவது பிரிவை ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணையைப் போன்று உச்ச நீதிமன்றம் பயன்படுத்துவதாக மிக கட்டமாக விமர்சித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம்போல செயல்படுவதாகாவும், சட்டம் இயற்றுவது, நிர்வாக பணிகளை செய்வது போன்ற நாடாளுமன்றத்தின் பணிகளை உச்ச நீதிமன்றம் செய்வதாக தெரிவித்துள்ள அவர் ஜனநாயகத்திற்காக நாடாளுமன்றம் ஒருபோதும் பேரம் பேசவில்லை, மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்திற்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவில்லை என்றால், அது சட்டமாகிறது எனவும் விமர்சித்துள்ளார். நாட்டில் அரசு, நீதி, நிர்வாகம் ஆகிய துறைகள் ஒன்றாக மலர வேண்டிய காலம் வந்துவிட்ட சூழலில், இவற்றில் ஏதேனும் ஒன்று மற்றொன்றுக்கு இடையூறு ஏற்படுத்துவது நல்லதல்ல எனவும் ஜெகதீப் தன்கர் கூறியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கும் ஆளும் முதல்வர் மமதா பானர்ஜிக்கும் பல்வேறு நிர்வாகம் மற்றும் அரசியல் விவகாரங்களில் தலைவலியை கொடுத்து வந்தவராக ஜெகதீப் தன்கரை அம்மாநில ஆளும் கட்சித் தலைவர்கள் விமர்சித்து வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் நாட்டின் ஜனநாயகத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி கவலைப்பட வேண்டும். அரசியலமைப்பு அதிகாரங்களை குறைப்பது நாட்டின் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். நீதிமன்றம் தனது அதிகாரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. நாடாளுமன்ற நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிடுவது சரியானதா?