பள்ளிகளில் 5ம் மற்றும் 8ம் வகுப்பு கட்டாய தேர்ச்சி முறை ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

Spread the love

பள்ளிகளில் 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆல் பாஸ் முறை (அனைத்திலும் தேர்ச்சி) கிடையாது என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்திருக்கிறது. இது கற்றல் திறனை மேம்படுத்தவும், மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வத்தை கொண்டுவரவும் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வித்துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் 5ம் மற்றும் 8ம் வகுப்பு மாணவர்கள் முழு ஆண்டு தேர்வில் தோல்வி அடைந்தால் அவர்களுக்கு உடனடியாக 2 மாதங்களில் துணை தேர்வு நடத்தப்படும். இதிலும் தோல்வியடைந்தால் மாணவர்கள் அதே வகுப்பில் திரும்ப படிக்க வேண்டும் என்று மத்திய அரசு தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009இன் படி, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் இந்த முறை அமலில் இன்று வரை உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய, நலிவு அடைந்த மாணவர்கள் கல்வி கற்கும் விதத்திலும், கிராமபுறத்தில் இருக்கும் மாணவர்களுக்கு பள்ளி கல்வி கிடைக்கும் வகையில், இடைநிறுத்ததை தடுக்கும் வகையில், கட்டாய தேர்ச்சி முறை அமல்படுத்தப்பட்டது.

குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தொடக்கக் கல்வி முடியும் வரை எந்தப் பள்ளியிலிருந்தும் மாணவர்களை வெளியேற்றக் கூடாது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதியக் கல்விக்கொள்கையில் 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே இதுவும் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதி என்று தமிழகத்தில் எதிர்ப்புக்குள் வழுக்கிறது. இது அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சாத்தியம் என்பதை கேல்ள்விகுறியாக்குகிறது என்று கல்வியாளர்கள் கவலை தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *