பாதாளத்தில் விழும் டாலர்..! முடங்கி நிற்கும் அமெரிக்கா..!

பாதாளத்தில் விழும் டாலர்..! முடங்கி நிற்கும் அமெரிக்கா..!
Spread the love

அமெரிக்கா முடக்கம் கடந்த வாரம் நடைபெற்ற வாக்கெடுப்பில், இருதரப்பு ஆதரவு தேவைப்பட்ட இந்த மசோதா 55-45 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நள்ளிரவு காலக்கெடுவுக்குள் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாததால், அக்டோபர் 1, புதன்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது.

அமெரிக்க அரசு முடங்கியதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மிக கடுமையாக, வேகமாக உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அரசாங்கத்தின் முடக்கம் அங்கே தீவிரம் அடைந்து வருகிறது. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் அதை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த தங்கள் நிலைப்பாட்டில் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளனர். இன்று வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில், இரு கட்சிகளுக்கிடையேயான பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றத்தையும் எட்டவில்லை. இரண்டு தரப்பும் மாறி மாறி குற்றஞ்சாட்டும் நிலையில். இப்போதைக்கு அங்கே பிரச்சனை சரியாகும் என்று தெரியவில்லை.À

பல்வேறு இன்சூரன்ஸ் தொடர்பான விவகாரங்களில் இரண்டு தரப்பிற்கும் கருத்து வேறுபாடு இருப்பதால் அங்கே இந்த மோதல் இப்போதைக்கு சரியாகாது என்று கூறப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை அதிகாலை 12:01 மணிக்கு அதிகாரப்பூர்வமாக முடங்கியது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக, செனட் அவை அங்கு தற்காலிக நிதியுதவி மசோதாவை அங்கீகரிக்கத் தவறியது. இதனால் தற்போது அங்கு அரசு முடங்கி உள்ளது.

அத்தியாவசியமற்ற அரசு சேவைகளை நிறுத்த இதன் மூலம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது போக விமானப் பயணத்தைத் தடைசெய்யலாம், முக்கியமான பொருளாதார அறிக்கைகளை தாமதப்படுத்தலாம் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் சிறு வணிக கடன் அலுவலகங்களை மூடலாம் என்று அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியமில்லாத விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.

தங்கம் விற்பனை

அமெரிக்க அரசு முடங்கியதால் இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை மிக கடுமையாக, வேகமாக உயரும் என்று கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதன் காரணமாகவே அமெரிக்காவில் இன்று அதிகாலை தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியது. பாதுகாப்பான முதலீடான தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. அதாவது 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தங்கத்தின் மிக சிறந்த மாதமாக இது மாறி உள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயரும்

கடந்த ஒரு வருடத்தில் தங்கத்தின் விலை 50% உயர்ந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்த உயர்வு 112% ஆக உள்ளது. தங்கத்தின் மீதான தேவை குறையாமல் இருப்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதன் விலை ரூ.2 லட்சத்தைத் தொடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்விற்கு கோவிட்-19 பெருந்தொற்று, ரஷ்யா-உக்ரைன் போர், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம், அமெரிக்காவின் உலகளாவிய வரிகள் மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகள் போன்ற பல காரணிகள் பங்களித்துள்ளன. கடந்த ஒரு வருடமாக நிஃப்டி 50 போன்ற பங்குச் சந்தைகள் கணிசமான வருமானத்தை வழங்காத சூழலில், முதலீட்டாளர்கள் தங்கத்தில் அதிக ஆர்வம் காட்டுவது அதன் விலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *