தமிழ்நாடு வெற்றி கழகம் சார்பாக நேற்று (சனி கிழமை) கரூரில் நடந்த கூட்டதில் 1000 அதிகமானோர் கலந்து கொண்டனர். இதில் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிர் இழந்ததாக தெரிவிக்கபட்டது. 51 மேற்பட்டடோர் உயிருக்கு போராடிய நிலையில் மருந்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளன.
ஒரு குழந்தையை காணவில்லை என தெரிவித்ததும் அங்கிருந்த கூட்டம் சிதறி ஓடியது. இதனாலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதுவரை 39 பேர் உயிரிழந்துவிட்டனர். அவர்களில் பெண் குழந்தைகள் 5 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண்கள் 17 பேர், ஆண்கள் 13 பேர் என 39 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 51 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இறந்தவர்களின் விவரங்களை பார்க்கலாம்:
கரூர் தாமரைக்கண்ணன் (25)
ஹேமலதா (28)
சாய்லட்சணா (8)
சாய் ஜீவா (4)
சுகன்யா (33)
ஆகாஷ் (23)
தனுஷ்குமார் (24)
வடிவழகன் (54)
ரேவதி (52)
சந்திரா (40)
குருவிஷ்ணு (2)
ரமேஷ் (32)
சனுஜ் (13)
ரவிகிருஷ்ணன் (32)
பிரியதர்ஷினி (35)
தரணிகா (14)
பழனியம்மாள் (11)
கோகிலா (14)
மண்மங்கலம் மகேஷ்வரி (45)
அரவக்குறிச்சி அஜிதா (21)
கரூர் மாலதி (36)
கரூர் சுமதி (50)
காங்கேயம் மணிகண்டன் (33)
ஈரோடு சதீஷ்குமார் (34)
கரூர் கிருத்திக்யாதவ் (7)
சேலம் ஆனந்த் (26)
குஜியம்பாறை சங்கர்கணேஷ் (45)
கரூர் விஜயராணி (42)
காங்கேயம் கோகுல பிரியா (28)
ஒட்டன்சத்திரம் பாத்திமாபானு (29)
கரூர் கிஷோர் (17)
கரூர் ஜெயா (55)
கரூர் அருக்காணி (60)
புகளூர் ஜெயந்தி (43)
தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதயம் நொறுங்கிப் போய் இருக்கிறேன்; தாங்க முடியாத, வார்த்தைகளால் சொல்ல முடியாத வேதனையிலும் துயரத்திலும் உழன்று கொண்டிருக்கிறேன். கரூரில் உயிரிழந்த எனதருமை சகோதர சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர், விரைவில் குணமடைய பிரார்த்திக்கின்றேன். என பதிவிட்டுள்ளார்.
