தமிழகத்தில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் & தொண்டர்கள் கவலையடைந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, தமிழ்நாட்டின் உரிமைகளை அ.தி.மு.க ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்றும், தொடர்ந்து கூறிவந்தார். அதை எதிர்க்கட்சியினர் பொய் என்று கூறி மறைமுக தொடர்பு பாஜகவுடன் இருப்பதாகவும் கூறிவந்தனர்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திடீரென மார்ச் 25ம் தேதி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தமிழக நலனுக்காக சந்தித்ததாக அவர் கூறினாலும், கூட்டணி பேச்சுதான் என்பதை அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. சென்னையில் மத்திய அமைச்சர் அமித் ஷா, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் ஆலோசனை நடத்திப் பிறகு மாலையில் கிண்டியில் உள்ள ஓட்டலில், அருகில் பழனிசாமி மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோரை வைத்துக் கொண்டே, அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் அதிமுக நிர்வாகிகள் வரக்கூடிய தேர்தலில் நின்று வெற்றிபெறலாம் என்று வேலை செய்தவர்கள் தொடரலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் பலர் தோல்வி அடைந்ததற்கு முழு கரணம் பிஜேபி யுடன் கூட்டணிவைத்ததுதான் என்று ஜெயக்குமார், சீ.வி சண்முகம் கே.பி முனுசாமி மற்றும் அன்வர் ராஜா உட்பட பல முக்கிய தலைவர்கள் & மாவட்ட செயலர்கள் பகிரங்கமாக கூறிவந்தனர். வேலுமணி & தங்கமணி மட்டும் நாம் பிஜேபியுடன் கூட்டணிவைப்போம் என்று அப்போதிலிருந்த கூறிவந்ததாக சொல்லப்பட்டது.
அதிமுக தங்கள் ஓட்டு வங்கியை இழப்பதற்கு முழு காரணம் பிஜேபி யுடன் கூட்டணிவைத்ததுதான். ஏனேன்றால் சிறுபான்மையிர்னரின் ஓட்டு பல இடங்களிலில் வெற்றியை தீர்மாணிப்பதாக உள்ளது. பல இடங்களிலில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஆதிதிராவிடர்கள் அடர்த்தியாக பல தொகுதிகளில் வசிக்கின்றனர். அவர்களில் ஓட்டும் அதிமுகவின் திராவிட சித்தாத்ததில் உள்ள தொண்டர்களின் ஓட்டும்
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாறுமா என்பது சந்தேகமே?. எனவே உள்ளாட்சி தேர்தலில் நாம் செய்ப்பது சந்தகமே என்று நிர்வாகிகள் முனுமுனுக்கின்றனர்.
கடந்த காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிக் கொள்கிறது எனும் ஏகமனதான தீர்மானத்தை அறிவித்தவுடன் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.