சரக்கு மற்றும் சேவை வரியை அவசரமாகச் செயல்படுத்திய காரணத்தால், ஜிஎஸ்டி யில் பல குறைபாடுகள் கொண்டுள்ளது. இது மட்டுமல்லாமல் செயல்பாட்டில் ஏற்பட்ட சிக்கல்களால், இந்தக் குறைபாடுகள் பெருமளவில் வெளிப்படுத்தப்பட்டன. கோயமுத்தூரில் நடந்த கூட்டத்தில் அன்னபூர்ணா ஹோட்டலின் உரிமையாளர் கேட்ட கேள்வி மிகப்பெரிய சர்சையாக ஆனது. இது போன்று பி.டிஆர் அவர்கள் பல பேட்டிகளில் பல குறைகளை சொல்லிக்காட்டியிருக்கிறார்கள்.
சரக்கு மற்றும் சேவை வரி ஏழை மக்களை கசக்கிப் பிழிகிறது என்று அப்போதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பியது. இந்தியாவில் பணக்காரர்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிக்கப்படவில்லை; மாறாக ஏழைகள் பயன்படுத்தும் பொருட்கள் மீது தான் அதிக வரி விதிக்கப்படுகிறது என்பது தான் மிக பெரிய குற்றசாட்டு.
மக்களுக்கு தேவையாக அரிசி தயிர் போன்ற அத்தியாவசிய உணவு பொருட்களுக்கு ஜி.எஸ்.டி விதித்து உழைக்கும் மக்களை வதைக்கிறது ஒன்றிய அரசு. பெட்ரோல் – டீசல் மீதான ஒன்றிய அரசின் வரி விதிப்பின் மூலம் அனைத்து பொருட்களின் விலையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இப்படி வரி விதிப்பின் ஓர் புதிய நடைமுறையாக ஜி.எஸ்.டி வரியை மோடி அரசு கொண்டுவந்து சிறுதொழில்களை அழித்து விட்டது.
உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஜி.எஸ்.டி வரி 10%க்கும் குறைவாகவே உள்ளது; அதுமட்டுமின்றி, ஒரு சில நாடுகளைத் தவிர மீதமுள்ள நாடுகளில் ஒரே வரி விதிப்பு தான் உள்ளது. ஆனால், இந்தியாவில் தான் 5%, 12%, 18%, 28% என நான்கு அடுக்குகளாக ஜி.எஸ்.டி வசூலிக்கப்படுகிறது.
ஆனால் இன்று அரசு தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பத்திற்கு 18% ஜிஸ்டி விதிக்கப்படும் என்ற செய்தி வேலை இல்லாமல் திண்டாடும் இளைஞர்களுக்கு மேலும் காயத்தை ஏற்டுத்தி இருக்கிறது.