புஷ்பா இரண்டாவது பாகம் வியாழக்கிழமை (டிச.5) வெளியானது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சாம்.சி.எஸ்.பின்னணி இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் பான் இந்தியா அளவில் வெளியானது. இதன் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு பூர்த்தி செய்யும் விதமாக படம் குறையில்லாமல் விருந்து வைத்திருக்கிறது. இந்த சூழ்நிலையில வசூல் வேட்டையை தொடர்ந்து நடத்திவருகிறது.
இந்நிலையில் புஷ்பா 2 படம் வெளியாகி சில நாட்கள் நிறைவடைந்திருக்கும் சூழலில்; உலகளவில் அந்தப் படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டிருக்கிறது. அதன்படி இந்தப் படம் இதுவரை 829 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தி வெர்ஷனில் மட்டுமே ரூ.210 கோடி வசூலை தாண்டியுள்ளது. இதனைப் பார்த்த இந்திய திரையுலகம் உச்சக்கட்ட ஆச்சரியத்தில் மூழ்கியிருக்கிறது.