காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியின் உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சில நாட்களுக்கு முன்பாக உடல்நலக் குறைவால் மறைந்தார். அதனை தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.
டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஈரோடு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவித்தார். அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்த இடைத்தேர்தலை வைத்து மக்களுடைய பல்ஸை தெரிந்துகொள்ள ஆளும் தி.மு.க ஆர்வமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி எனவே எங்களுக்கே தரவேண்டும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை வைத்துள்ளார். அ.தி.மு.க வருகின்ற ஜனவரி 11ம் தேதி கூட்டத்தில் முடுவு எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. தேமுதிக, பாமக ஆதரவை மட்டும் தெரிவித்துக்கொண்டு ஆட்டத்தில் சேராமல் ஒதுக்கிக் கொள்ளும். நாம் தமிழர் கட்சி. பாஜக போன்ற கட்சிகள் போட்டியிடுவது சந்தேகம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் வேட்பாளரை நிறுத்தாததால் ஈரோடு சட்டசபை தேர்தல் மந்தமாக உள்ளது.