இன்று நம்மில் அதிகமானோர் ஒன்றுக்கு அதிகமான சிம் கார்டை உபயோகிக்கிறோம். ஆனால் நவீன டெக்னாலஜி வளர்ந்த இந்த காலத்தில் நம்முடைய அடையாள அட்டைகளை வைத்துக்கொண்டு யாருவேண்டுமாலும் தவறாக பயன்படுத்துவதற்கு பல வகைகள் இருக்கிறது. தொலைதொடர்புத் துறை (DoT) ஒழுங்கு முறைப்படி ஒரு யூசர் ஒரு ஐடியில் ஒன்பது மொபைல் எண்கள் வரை பெறலாம். அதனால் நம் அடையாள அட்டைகளை வைத்து எத்தனை சிம் உள்ளது என்பதை தெரிந்து கொள்வது மிக மிக அவசியம்.
எப்படி தெரிந்து கொள்வது?
முதலில் https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.

பின்பு உங்கள் மொபைல் நம்பரை என்டர் செய்யவும் பின்பு திரையில் காட்டப்படும் கேப்ட்சாக்களை எழுதி Validate Captcha என்ற பட்டனை அழுத்தவும்.
உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு ஒரு OTP அனுப்பப்படும். அந்த OTP-ஐ என்டர் செய்து உள்ளே நுழைய வேண்டும்.
அடுத்த பக்கத்தில் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டின் எண்களை காட்டும். அதில் நாம் உபயோகிக்காத நம்பரை அழித்துக்கொள்ளலாம்.