நடிகரும் த.வெ.க. தலைவருமாகிய விஜய் அவர்கள் ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற நூலை வெளியிட, முதல் பிரதியைப் அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
அம்பேத்கர் நினைவு தினமான நேற்று (டிசம்பர் 6) ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் வெளியிட்டது.

இந்த நிகழ்ச்சியில் முதலில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் பின்னர் அவர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் பேசிய ஆதவ் அர்ஜூனா, “பட்டியலினத்தை சாராத ஒருவர், அம்பேத்கர் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்பது அண்ணன் திருமாவளவனின் கனவு. அது இந்த மேடையில் நனவாகியுள்ளது. புத்தகத்தை சகோதரர் விஜய் வெளியிடுகிறார்” என்று கூறியிருந்தது, தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிக்கை:

வன்னியரசு வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “சட்டமேதை அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரைக் கொள்கை ஆசான்களாக ஏற்றுக்கொண்டு கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் களமாடி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன். அவரை யாரும் பின்னிருந்து வழிநடத்த முடியாது. சில அரசியல் தரகர்கள் அப்படி முயற்சிக்கிறார்கள்.
ஆனால், நூல் வெளியீட்டாளர்கள் திருமாவளவனை புறக்கணித்துவிட்டு பாயாசம்தான் வேண்டும் எனப் போயிருக்கிறார்கள். அது அவர்கள் விருப்பம். ஆனால், திருமாவளவன் நிகழ்ச்சியைப் புறக்கணித்துவிட்டார் என்ற பொய்ப் பிரச்சாரத்தை ஊக்குவிப்பது அவரை மட்டுமல்ல, அம்பேத்கரையும் அவமதிப்பது ஆகும். நூல் வெளியீட்டாளர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கரும், திருமாவளவனும் நெருப்பைப் போன்றவர்கள். அவர்களைப் பொட்டலம் கட்ட எவராலும் முடியாது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அதுகுறித்துப் பேசியபோது, “அம்பேத்கரின் நினைவு நாளில், இப்படி ஒரு நிகழ்வில் கலந்துகொள்வது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்” என்று பேசிய விஜய், “விசிக தலைவர் திருமாவளவன் அவர்களால் இன்று வர முடியாமல் போனது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாத அளவிற்கு அவருக்குக் கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது” என்றார்.
நன்றி.
