ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் இன்று இந்தியா- இலங்கை மோதல்

மகளிர் உலகக் கோப்பை
Spread the love

13வது ஐசிசி ஒருநாள் போட்டி இன்று முதல் துவக்கம். 12 வருடங்களுக்கு பிறகு தற்போதுதான் மகளிர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறுகிறது. இன்று முதல் துவங்கி நவம்பர் 2 வரை நடைபெறும் இந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டு விளையாட உள்ளன.

மொத்தம் 28 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இந்தியாவில் 4 நகரங்களிலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை சுமார் ரூ.123 கோடியாகும்.

47 வருட கனவு பலிக்குமா?

47 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாததை இந்த முறை வெல்லுமா? இந்திய மகளிர் சாதிக்குமா?. இறுதி போட்டிக்கு தகுதி பெற்றும் கோப்பையை வெல்ல முடியாததாள் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆசியா கோப்பையை வென்ற நம்பிக்கையுடன் களமிறங்கும் இந்திய மகளிர் அணி இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, இலங்கையுடன் மோதுகிறது.

இந்தியா vs பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 5 அன்று கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானை எதிர் கொள்கிறது. ஆசிய கோப்பை முடிந்த ஒரே வாரத்தில் மீண்டும் இந்தியா vs பாகிஸ்தான் மீண்டும் மோதுவதால் ரசிகர்கள் இடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

அட்டவணை


அக்டோபர் 9
இந்தியா vs தென் ஆப்பிரிக்கா

அக்டோபர் 12
இந்தியா vs ஆஸ்திரேலியா

அக்டோபர் 19
இந்தியா vs இங்கிலாந்து

அக்டோபர் 23
இந்தியா vs நியூசிலாந்து

அக்டோபர் 26
இந்தியா vs வங்கதேசம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *