இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் காலாவதி ஆகும் நேரத்திற்கு ஏற்ப தேர்தல் அந்த அந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது.
ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 32 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு கடந்த ஆட்சியில் திட்டமிட்டது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி, மக்களவை முன்னாள் செயலாளர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த குழு சமீபத்தில் தங்கள் அறிக்கையை தாக்கல் செய்தனர், அதில் ஒரே நாடு ஒரே தேர்தளுக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெற்றன. அதை தொடர்ந்து கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ஆனால் தமிழகம் முதல் அனைத்து மாநில கட்சிகளும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தொல். திருமாவளமன் , சீமான், வேல்முருகன், கம்சனிஸ்ட் கட்சிகள் உட்பட அனைத்து தமிழக கட்சிக்கலும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இருந்த போதிலும் இதை நிறைவேற்றியே தீருவோம் என்று மத்திய பா.ஜ.க அரசு உறுதியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து மக்களவையில் இன்று (டிச.16) கூடும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை மத்திய அரசு தள்ளிப்போட்டுள்ளதாக தகவல் தெரிகிறது.