கலக்க போகும் கன மழை..! பருவ மழை ஆரம்பம்..!

கலக்க போகும் கன மழை..! பருவ மழை ஆரம்பம்..!
Spread the love

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதிக்குள் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக் கடல் மற்றும் கேரளா கடலாலோரா பகுதியில் புதிய வளிமடல மேலடுக்கு சுழற்சி காரணமாக 

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் அதனால் தமிழகத்தில் அதி கனமழை பெய்யும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

மழை பெய்ய வாய்ப்பு!

தமிழகத்தில் ஒரு வாரத்திற்குப் பல மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியே இதற்குக் காரணமாகும். நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை அதிகரிக்கும் எனவும், மழை காரணமாக வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி!

தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு கேரளா கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும். பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் மழை பதிவாகியுள்ளது.

இன்று கனமழை பெய்யும் மாவட்டங்கள்!

அக்டோபர் 13 ஆம் தேதி, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். குறிப்பாக, கோயம்புத்தூர், திருப்பூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருச்சி, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள்!

அக்டோபர் 14 ஆம் தேதி, தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை

அக்டோபர் 15 ஆம் தேதி, தமிழகத்தின் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். திருநெல்வேலி மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தொடர் கனமழை!

அக்டோபர் 16 ஆம் தேதி, தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தென் மாவட்டங்களில் கனமழை!

அக்டோபர் 16 முதல் 19 ஆம் தேதி வரை, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *