கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை திட்டம் ஜூன் மாதம் விரிவுபடுத்தப்படலாம் என்று சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டில் 2 கோடியே 20 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளது. இதில் 1 கோடியே 15 லட்சம் நபர்கள் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமை திட்டதில் பயனடைகிறார்கள். எனவே நிராகரிக்கப்பட்டவர்கள், அல்லது விண்ணப்பிக்க தவறியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க தகுதில் உள்ளவர்கள்.
- ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
- ஆண்டிற்கு வீட்டு உபயோகத்திற்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
- பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.
- ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
- குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
- ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
- மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள் / வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
- தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
- சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
- ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
- ஏற்கனவே தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
- குடுப்ப அட்டை
- ஆதார் அட்டை
- குடுப்ப தலைவி பெயரில் வங்கி கணக்கு புத்தகம்.
- வருமான சான்றிதழ்
கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது, ஆனால் பலர் இதில் இன்னும் பங்கேற்கவில்லை. இந்த திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவது நல்ல முன்னேற்றமாகும். நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்பது நல்ல செய்தி. இந்த திட்டம் எத்தனை பேருக்கு மேலும் பயனளிக்கும்?