காசா முழுவதும் நடத்திய சமீபத்திய இஸ்ரேல் வான்தாக்குதல்களில் 13 பேர் கொல்லப்பட்டனர் – பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று அல்ஜஷீரா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல், காசாவுக்கு உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான உதவிகளை எட்டு வாரங்களாகத் தடைசெய்து வருகிறது. அதே நேரத்தில், வீடுகள் மற்றும் கூடாரங்கள் மீது வான்தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதை ஐக்கிய நாடுகள் “மோசமான மனிதாபிமானமற்ற செயலாக விவரிக்கிறது.
பாலஸ்தீன அதிகாரபூர்வ தகவலின் படி , “இஸ்ரேலின் தாக்குதல் இடைவெளி இல்லாமல், பாலஸ்தீன மக்களை முற்றிலுமாக அழிக்கும் நோக்கில் உள்ளதாகவும். இஸ்ரேலின் உதவித் தடையால் மேலும் மேலும் மோசமடைந்துள்ளது. ஐ.நா.வின் மனிதாபிமான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (OCHA) தலைவர் இதை “பாலஸ்தீன மக்களின் வாழ்க்கையை வேண்டுமென்றே அழிக்கும் முயற்சி” என்று விவரித்தார்.
காசாவின் சுகாதார அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படுவதை “அபாயகரமானது மற்றும் பேரழிவு” என்று எச்சரித்துள்ளது. பலருக்கு போதுமான உணவு, குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கான பால் டப்பாக்கள் கிடைக்காமல் தவிப்பதாகவும் கூறியுள்ளது.
2024 மே மாதம் உலக நீதிமன்றம், பஞ்சம் மற்றும் பட்டினியைத் தடுக்க காசாவுக்கு உதவிகளை அனுமதிக்க இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. ஆனால் இஸ்ரேல் இதை மீண்டும் மீண்டும் புறக்கணித்து வருகிறது.
Source: Al Jazeera