காசாவில் நடந்துவரும் போரில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் தரைவழி நடவடிக்கைகளால் 15,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காஸாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர், இடிபாடுகளுக்கு அடியில் புதைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
காசாவில் உள்ள சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய ஆய்வு, காசாவின் 1.1 மில்லியன் குழந்தைகளில் 15,000க்கும் அதிகமானோர் – அல்லது மொத்த குழந்தை மக்கள் தொகையில் 1% – அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு கொல்லப்பட்டுள்ளனர் .
காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் தகவலின்படி, 11,100க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் காஸாவில் அக்டோபர் 7ஆம் தேதி முதல் கொல்லப்பட்டுள்ளனர். போராளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே எந்தவித பாகுபாடு இல்லை என்றாலும், இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று வாஷிக்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஆறு மாதமாக நிகழ்ந்து வரும் மோதலில், ஏறத்தாழ 26,000 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயமடைந்துள்ளனர் என்றும், உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளையும், தங்கள் அன்புக்குரியவர்களையும், தாங்கள் படித்த பள்ளிகளையும், தங்கள் அன்றாட வாழ்க்கையையும் இழந்து, இன்று பட்டினியால் வாடுகிறார்கள் என்றும் பெரும் கவலையுடன் எடுத்துக்காட்டியுள்ளது வாடிகன் செய்தி.
இத்தகையதொரு மோசமான நிலை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று எனச் சுட்டிக்காட்டியுள்ள ஐ .நா அறிக்கை, உடனடி மற்றும் உறுதியான போர்நிறுத்தம் தேவை என்று கூறியுள்ளது.
- காசாவில் 370 பள்ளிகள் சேதமடைந்தன அல்லது அழிக்கப்பட்டன [UNICEF].
- காசாவில் 94 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார வசதிகள் தாக்கப்பட்டன [WHO].
- 1,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய குழந்தைகள் ஒன்று அல்லது இரண்டு கால்களை இழந்துள்ளனர் [UNICEF].
- சுமார் 1.1 மில்லியன் குழந்தைகள் – காசாவில் உள்ள மொத்த குழந்தை மக்கள் தொகை – போதுமான மனிதாபிமான உதவிக்கான காத்திருக்கிறார்கள் என Save the Children எனப்படும் உலகளாவிய குழந்தை நல அமைப்பு தெரிவித்துள்ளது.