கிரிப்டோ கரன்ஸி சந்தை கடும் வீழ்ச்சி..!பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு..!

கிரிப்டோ கரன்ஸி சந்தை கடும் வீழ்ச்சி..!பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு..!
Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப் பொருட்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்ததை அடுத்து, கிரிப்டோ சந்தை வீழ்ச்சியடைந்தது.

இதனால் 1.6 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள் 19 பில்லியனுக்கும் அதிகமான டாலர்களை இழந்துள்ளனர். இது கிரிப்டோ வரலாற்றில் மிக மோசமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. காயின் கிளாஸ் நிறுவனத்தின் 24 மணிநேர தரவுகளின்படி, கிரிப்டோ வரலாற்றில் மிகப்பெரிய வீழ்ச்சி இது பதிவாகியுள்ளது. இதில், 1.6 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அக்டோபர் 10 அன்று, ஒரு மணி நேரத்திற்கும் குறைவான வர்த்தகத்தில், 7 பில்லியனுக்கும் அதிகமான டாலர் மதிப்பிலான கிரிப்டோ சொத்துக்கள் விற்கப்பட்டுள்ளன.

மல்டி காயின் கேபிடல் (Multicoin Capital) நிறுவனத்தின் தலைமை வர்த்தகர் பிரையன் ஸ்ட்ருகட்ஸ் கூறுகையில், சந்தை முழுவதும் பரவக்கூடிய அச்சம் காரணமாக, மொத்த கிரிப்டோ விற்பனை 30 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருக்கலாம் என்று மதிப்பிட்டுள்ளார்.

காயின் மார்கெட் கேப் (CoinMarketCap) தரவுகளின்படி, கிரிப்டோகரன்சி சந்தை மதிப்பு, முந்தைய நாள் இருந்த 4.30 டிரில்லியன் டாலரிலிருந்து 3.74 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. சந்தை முடிவடைந்த நேரத்தில், வர்த்தக அளவு 490.23 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது. கிரிப்டோகரன்சிகளில், உலகின் மிகப்பெரிய நாணயமான பிட்காயின், 59.8% சந்தைப் பங்கையும், இரண்டாம் இடத்தில் உள்ள எத்தேரியம் 12.2% பங்கையும் கொண்டிருந்தன. மீதமுள்ள டோக்கன்கள் 27.9% பங்கைப் பெற்றன.

செக்யூரிட்டி முதல் சாஃப்ட்வேர் இன்ஜினியர் வரை – தலையெழுத்தை மாற்றிய Zoho. அக்டோபர் 11 அன்று மதியம் 12.42 மணியளவில், பிட்காயின் 8.05% சரிந்து 1,11,542.91 டாலராக இருந்தது. இதன் சந்தை மதிப்பு 2.22 டிரில்லியன் டாலராகவும், வர்த்தக அளவு 183.88 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது. இது விற்பனை அதிகரித்ததை காட்டுகிறது. எத்தேரியம் 12.71% குறைந்து 3,778.31 டாலராக இருந்தது. அதன் சந்தை மதிப்பு 456.05 பில்லியன் டாலராகவும், கடந்த 24 மணி நேரத்தில் வர்த்தக அளவு 148.68% அதிகரித்து 112.75 பில்லியன் டாலராகவும் உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *