கோவையில் பீப் பிரியாணி கடைக்கு கொலை மிரட்டல்: பா.ஜ.க பிரமுகர் மீது வழக்கு பதிவு

Spread the love

கோவையில் பீப் கடை நடத்தும் தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜக பிரமுகர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் உடையம்பாளையம் பகுதியில் மூன்று சந்திப்பு பகுதியில் ரவி – அபிதா என்ற தம்பதி தள்ளுவண்டியில் பீஃப் பிரியாணியை விற்று வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென அப்பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி இவர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
மாட்டிறைச்சியை விற்ககூடாது என்று ஊர் கட்டுப்பாடு இருப்பதாகவும் மீறி விற்றால் 10 பேருடன் வந்து அடித்து கடையை உடைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். மேலும், இப்பகுதியில் கோழி இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள் என்றும் ஆனால் மாட்டிறைச்சியை மட்டும் விற்கக் கூடாது என மிரட்டி உள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி தமிழக முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கிடையே அந்த தம்பதி சார்பில் காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த நிலையில் பீப் பிரியாணி கடை நடத்தும் தம்பதி பாதுகாப்பு வழங்கக் கோரி கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். பாதுகாப்பு வழங்கவும், அதே இடத்தில் கடையை வைக்க அனுமதிக்க கோரியும் ஆபிதா, ரவி தம்பதி ஆணையரிடம் மனு அளித்தனர். உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் சுப்பிரமணி மீது துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பாஜக ஒ.பி.சி. அணி மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது 126(2), 192, 196, 351/2 ஆகிய 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாங்கள் எங்கு கடை போட்டு இருந்தோமோ அங்கேயே கடையை மீண்டும் தொடர வேண்டும் என்றும், எங்களுக்கு தெரிந்த தொழில் இது மட்டுமே எனக் கூறியும் என்னுடைய பீப் கடை தற்போது அகற்றப்பட்டு இருப்பதால் கமிஷனர் மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் குடும்பம் மற்றும் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்றும் பண பலம் இருக்கும் அவர்கள் எங்களை மிரட்டுவதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்துகொடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *