நீண்ட காலமாக சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரவுள்ள நிலையில் மத்திய அரசு சிலிண்டர் விலை குறையும் என எதிர்பார்க்கபட்ட நிலையில், வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, வணிக பயன்பாட்டாளர்களுக்கு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.16 உயர்ந்து ஒரு சிலிண்டர் விலை ரூ.1,754க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, மாதந்தோறும் முதல் நாள் அல்லது இரண்டாவது நாளில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்கின்றன. அதாவது சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்ததை அடுத்து, இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானித்து வருகின்றன.
தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு சிலிண்டர், 868 ரூபாய் 50 காசுக்கு விற்கப்பட்டது. இந்த மாதம் அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. வணிக சிலிண்டரின் விலையில் மாற்றம் இருந்தாலும், வீட்டு உபயோக தேவைகளுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.
