சொந்த ஊரில் அரசு வேலை..! தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

சொந்த ஊரில் அரசு வேலை..! தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!
Spread the love

தமிழ்நாடு அரசு (Grama Panchayat Secretary) வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகச் சிறந்த செய்தி! ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (TNRD) ஆனது, தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 1,483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பின் சிறப்பு என்னவென்றால், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும், எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது, நேர்காணல் மூலம் மட்டுமே தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது நிரந்தரமான தமிழ்நாடு அரசு வேலை என்பதால், இப்போதே விண்ணப்பிப்பது உங்கள் எதிர்காலத்திற்கு நல்லது.

இந்த அறிவிப்பில் மொத்தம் 1,483 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ளபடி, மாதம் Rs.15,900 முதல் Rs.50,400 வரை சம்பளம் வழங்கப்படும். பணியிடம் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள கிராம ஊராட்சிகளில் இருக்கும். விண்ணப்பதாரர்கள், இப்பணிக்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள் அனைத்தையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியில் படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு- 18 முதல் 32 வரை

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்) / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் /சீர் மரபினர் – 18 முதல் 34 வரை

ஆதி திராவிடர் /ஆதி திராவிடர் (அருந்ததியர்) பட்டியல் பழங்குடியினர் (ம) ஆதரவற்ற விதவை – 18 முதல் 37 வரை

மாற்றுத்திறனாளிகள் – அதிகபட்ச வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் வரை நீட்டிப்பு

முன்னாள் இராணுவ வீரர் (பொதுப்பிரிவு) – 18 முதல் 50 வரை

விண்ணப்பக் கட்டணம்;

ரூ.100/- (பொது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) ரூ. 50/- (ஆதிதிராவிடர் /பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள்). இந்த அரசுப் பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பக் கட்டணமாக ஆதிதிராவிடர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.50/- மட்டுமே. மற்ற இதர பிரிவினர் ரூ.100/- செலுத்த வேண்டும்.

தேர்வு முறை மிகவும் எளிமையானது. எழுத்துத் தேர்வு எதுவும் கிடையாது. தகுதியான விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதியின் அடிப்படையில் சுருக்கப்பட்டு, நேர்காணல் (Interview) மூலம் மட்டுமே இறுதியாகத் தேர்வு செய்யப்படுவார்கள். இது தேர்வு பயம் உள்ளவர்களுக்குக் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகும்.

விண்ணப்பதாரர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnrd.tn.gov.in மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

சொந்த ஊரில் அரசு வேலை..! தமிழக அரசின் சூப்பர் திட்டம்..!

• விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 10.10.2025

• விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.11.2025

விண்ணப்பதாரர்கள் கடைசித் தேதிக்குக் காத்திருக்காமல், உடனே அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து, தங்களின் தகுதியை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மாவட்ட வாரியாக காலி பணியிடங்களை அறிந்துகொள்ள இணைப்பு;

https://tnrd.tn.gov.in/project/Recruitment_Report/ps_communal_category_wise_vacancy_details_roaster.php என்ற இணைப்பில் காணலாம்.

அதேபோல மாவட்ட வாரியாக அரசு சார்பில் வெளியிட்ட விளம்பர அறிவிக்கையை  

Lhttps://tnrd.tn.gov.in/project/recruitment/Advertisement_ps/advertisement_display.php என்ற இணைப்பில் காணலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *