டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்துக்கு ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜகவும், காங்கிரசும் தீவிரமாகப் பரப்புரை செய்து வந்தன.
டெல்லியில் உள்ள 699 வேட்பாளர்களில் ஐந்து பேர் கோடீஸ்வரர்கள், அவர்களில் 23 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன. பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த தேர்தலில் பா.ஜ.க., ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
1990-களில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி டெல்லி தேர்தலில் வெற்றி பெறவில்லை. பா.ஜ.க. 1998-க்குப் பிறகு டெல்லியில் வெற்றி பெறவில்லை. 26 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெறும் முனைப்புடன் தீவிரமான வேலை செய்தது.
காங்கிரஸ், பா.ஜ.க. கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் பற்றி அறிவிக்கவில்லை. ஆம் ஆத்மியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி வாக்காளர்கள்:
ஆண் வாக்களர்கள் – 83.47 லட்சம்
பெண் வாக்களர்கள் – 71.73 லட்சம்
மொத்த வாக்காளர்கள் -1.55 கோடி