இராமநாதபுரம்: தொண்டியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மேம்படுத்தவும், நிரந்தர மருத்துவர்களை உடனடியாக நியமிக்க கோரியும் இன்று 30 டிசம்பர் 2024 தொண்டி மக்கள் நலப்பணிக்குழு, மற்றும் சுற்று வட்டார பொதுமக்களாலும் ஒருங்கிணைத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ யின் மாநில தலைவர் நெல்லை முபாரக் உட்பட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டதில் தொண்டி மிக முக்கியமான ஒரு பகுதி, இதில் 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,465 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இது மட்டுமல்லாமல் இதனை சுற்றி 40க்கும் அதிகமான கிராமங்கலும், குக்கிராமங்களும் இருக்கிறது. அணைத்து மக்களும் இங்குள்ள ஆரம்ப சுகாதார மருத்துவனையை பயன்படுத்துகின்றன. ஆனால் பல வருடங்களாக இங்குள்ள அரசு மருத்துவமனையில் போதுமான மருத்துவர் நியமிக்க படவில்லை என்பது பல வருட குற்றச்சாற்று. இந்த பகுதி கிழக்குக் கடற்கரைச் சாலை (ECR) யில் அமைந்துள்ளதால் இங்கு பல விபத்துகளும் அவ்வப்போது நடக்கிறது. அதற்கும் போதுமான வசதிகள் இல்லாததால் இராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடிய அவலம் ஏற்படுகிறது.


இது சம்பந்தமாக அங்குள்ள மக்களிடம் விசாரித்தபோது “நாங்கள் சட்டமன்ற உறுப்பினரிடமும் , பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டாலும் எந்த பயனும் இல்லை. நாங்கள் பல வருடங்களாக, பல தலைவரிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த பயனும் இல்லை, இங்கு மீனவர்கள் அதிகமாக வசிக்கிறார்கள், அவர்களுக்கு கடலில் எதாவது அசம்பாவிதகள் நடந்தால் கூட நாங்கள் இராமாநதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும், அது மட்டுமல்லாமல் எங்கள் ஊரை சுற்றி பல கிராமங்கள் இருக்கிறது, அங்கு உள்ள கர்ப்பமான பெண்கள் இங்கு வந்துதான் மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிக்சை பெற வரவேண்டியுள்ளது. எனவேதான் நாங்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம் என்று தெரிவித்தார்கள்.
இதில் IMMK தலைவர் ஹைதர் அலி, TMJK தலைவர் கே.ம். சரீப், தமிழா தமிழா பாண்டியன் உட்பட பல கட்சி தலைவர்கலும் 500 க்கும் அதிகமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள்.
