நாடாளுமன்றத்தில் அமித்ஷாவின் பேச்சுக்கு – TVK விஜய் கண்டனம்

Spread the love

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” புண்ணியமாகிருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த சர்சையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்து எதிரிப்பு கிளம்பியது.

தமிழக முதல்வர், துணை முதலமைச்சர், கர்நாடக முதல்வர் சித்தராமையா உட்பட அனைவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக வெற்றி கலகத்தின் தலைவர் விஜய் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக “யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.

அம்பேத்கர்…
அம்பேத்கர்… அம்பேத்கர்…
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.

எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *