இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு, ஒரு அடையாள அட்டையை அறிமுகம் செய்யப்போகிறது. இந்த அட்டைக்கு அபார் – APAAR அடையாள அட்டை என்று பெயர் வைத்துள்ளது. இந்த முயற்சியானது 2020 ஆம் ஆண்டின் புதிய தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து, அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘ஒரே நாடு, ஒரு மாணவர் ஐடி’ திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
போலி கல்வி சான்றிதழ்கள், போலி டாக்டர்கள் எத்தனையோ பேர் முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள். சில பேர் அரசு வேலை பெறுவதற்காக பல போலி கல்வி சான்றிதழ்களை பயன்படுத்துகிறார்கள். அரசு பணியிலும் சேர்ந்துவிடுகிறார்கள். இதனால், ஏழைகள் மற்றும் கஷ்டப்பட்டு கல்வி கற்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
ஆதார் கார்டில் இருப்பதை போலவே, அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும். மாணவர்களின் மதிப்பெண், கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து கல்வி சம்பந்தமாக ஆவணங்கள் குறித்த தகவல் அனைத்துமே, இந்த அபார் ஐடியில் இணைக்கப்பட்டு விடும். இதனால் மாணவர்கள் பள்ளி, கல்லூரி மாறுதல் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ID காண்பித்தாலே போதும், அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்..
நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு ஆதார் எண்களோடு இந்த அபார் ஐ.டி எண் சரிபார்க்கப்படும். நீட் தேர்வில் பல குளறுபடிகள் இருந்தாலும் அதை சரிசெய்வதற்க்காக இந்த திட்டத்தை மத்திய அரசு கொண்டுள்ளது.