காஷ்மீர்- பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதலின் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்ததை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் ஜல்சக்தி அமைச்சர் சிஆர் பாட்டில், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் ஜல்சக்தி துறையின் உயர் அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். இதனடிப்படையில், பாகிஸ்தானுடன் 1960 ஆம் ஆண்டு உலக வங்கியின் மூலம் ஏற்படுத்தப்பட்ட சிந்து நதி ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
1960-ம் ஆண்டு சிந்து நதிஒப்பந்தம்:
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 1960 செப்டம்பர் மாதம் 19-ம் தேதி சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இந்த ஒப்பந்ததின்படி இந்தியா 20% மற்றும் பாக்கிஸ்தான் 80% சிந்து நதியியிருந்து பயன்பெறுகின்றனர்.
இந்தியாவின் மேற்கு நதிகளை நீர்ப்பாசனம் மற்றும் மின்சாரத்திற்காக பயன்படுத்தலாம் மாறாக கனிசமான அளவு தண்ணீரை சேமித்துவைய்க்கவோ அல்லது திருப்பிவிடவோ முடியாது.
சிந்து ஆற்றில் பாயும் முக்கியத்துவம்:
சிந்து ஆறு, இமயமலைத் தொடரில் உள்ள திபெத்தின் மேற்குப் பகுதியில் உள்ள மானசரோவரை அருகில் தோன்றி, லடாக், காஷ்மீர், பாகிஸ்தானின் வடக்கு நிலங்கள், மற்றும் பஞ்சாப் வழியாக பாய்ந்து, தட்டா நகரத்திற்கு அருகில் அரபிக் கடலில் கலக்குகிறது. அதன் மொத்த நீளம் 3,610 கி.மீ. ஆகும்.
இந்த ஆறு பாகிஸ்தானின் விவசாயத்திற்கு முதன்மையான நீர் ஆதாரமாக இருக்கிறது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்தில் அதிகமான விவசாய உற்பத்தி சிந்து நதியை சார்ந்துள்ளது. பாகிஸ்தானின் மொத்த உற்பத்தியில் 25% இந்த நதியை சார்ந்த விவசாயத்திலிருந்து பெறப்படுகிறது. சுமார் 237 மில்லியன் மக்கள் இந்த ஆற்றின் நீரை சார்ந்து வாழுகின்றனர்.
பாகிஸ்தான் உலக வங்கியை நாடினால்:
இந்த ஒப்பந்தம் உலக வங்கி முன்னிலையில் அமைக்கப்பட்டதால், பாகிஸ்தான் தற்போது அந்த அமைப்பை அணுகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதை சட்டபூர்வமாக எதிர்கொள்ளும் வகையில் இந்தியா தயாராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்தியாவின் இந்த முடிவு பகுதி பகுதியாக சிந்து நதியின் நீர் நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.