உலகப் மிக பிரபல்யமான தபேலா இசை கலைஞர் ஜாகிர் உசேன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 73. அவர் நுரையீரல் பிரச்சனை (ஃபைப்ரோஸிஸால்) காரணமாக கடந்த சில மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (டிசம்பர்-15) அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துள்ளார்.
இசைக் கலைஞர் அல்லா ராக்கா அவர்களுக்கு 1951 ஆம் ஆண்டு மார்ச் 9ம் தேதி மகனாக உஸ்தாத் ஜாகிர் உசேன் மும்பையில் பிறந்தார். சிறுவயது முதலே அதிக ஆர்வம் கொண்டதினால் பல கட்சேரிகளில் சிறு வயது முதலே தபே லா வாசிக்கஆரம்பித்தார். செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்ற இவர், தந்தையின் அடிச்சுவட்டில் தபேலா வாசித்தாலும், தனக்கென்று தனியான ரசிகர்களை ஏற்படுத்திக்கொண்டார்.
ஜாகிர் உசேனை பெருமைப்படுத்தும் வகையில், 1988-இல் பத்மஸ்ரீ, 2002-இல் பத்ம பூஷண், 2023-இல் பத்ம விபூஷண் விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. அமெரிக்காவில் வழங்கப்படும் கலை மற்றும் பண்பாட்டு ஃபெலோஷிப் பெற்றவர் அதுமட்டுமல்லயாம் கிராமி விருதும் பெற்றுள்ளார்.
பல வருடங்களாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் குடும்பத்துடன் வசித்து வந்த ஜாகிர் உசேன், நுரையீரல் பிரச்சினை காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியான நிலையில், தற்போது இதனை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உறுதி செய்துள்ளனர். அந்த அறிக்கையில், ஜாகிர் உசேன் இரண்டு வாரங்களாகவே அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோ நகர் மருத்துவமனையில் நுரையீரல் பிரச்சினையின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று (டிசம்பர் 15) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளனர்.