Spread the love

புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் தனித்துவமாகக் காணப்படுகின்றன. நாம் கடந்த ஆண்டில் சந்தித்த பல்வேறு சிரமங்கள் மற்றும் பிரச்சனைகளை மறந்து, புதிய ஆண்டின் மூலம் எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் அணுகுகிறோம். மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள், வாழ்க்கையின் புதிய சாதனைககளை அடைவதற்கான நேரமாகவும் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் மாறுபட்ட முறைகளில் நடைபெற்றன. ஆனால் இன்று மதுவை மட்டுமே குறிக்கோளாக வைத்து, பப்களிலும், போதை ஏற்றக்கூடிய இடங்களிலும் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. போதைப் பொருள் பயன்பாடு உலகம் முழுவதும் ஒரு பெரும் சமூக மற்றும் நலனுக்கு ஆபத்தான பிரச்சினையாக மாறியுள்ளது.அதில் முக்கியமானது தமிழகம். மது போதைக்கு அடிமை என்பதை தாண்டி, கஞ்சா, ஹெராயின் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் ரசாயனம் சார்ந்த போதைப் பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் போதைப்பொருள்

கடந்தாண்டு காவல்துறை சார்பில் ‘போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழா” நடைபெற்றது. அதில் இதுவரை இல்லாத அளவுக்கு 16 ஆயிரம் கிலோ கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்கள் அழிக்கப்பட்டதாக” முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழகத்தில் போதைப் பொருள் கடத்தல், விற்பனை, பதுக்கல் தொடர்பாக 2022-ல் 645 பேர், 2023-ல் 504 பேர், 2024 ஆகஸ்ட் வரை 533 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2022 முதல் ஆகஸ்ட் 2024-வரை போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய நபர்களின் 8,949 வங்கி கணக்குகளில் ரூ.18.03 கோடி முடக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் பயன்பாடு, பொதுவாக மனஅழுத்தம், வாழ்க்கைமுறை சம்பந்தமான பிரச்சினைகள், மற்றும் சமூகம் அல்லது குடும்பம் எதிர்கொள்ளும் சவால்களால் தூண்டப்படுகின்றது. இவை பல சமுதாய பிரச்சினைகளையும், குற்ற செயல்களிலும் ஈடுபடசெய்கிறது என்பது தினந்தோறும் செய்தியாகி வருகிறது.

ஆன்லைனில் போதைப்பொருள்

சமீப காலங்களில், ஆன்லைன் மற்றும் டார்க் வலைத்தளங்கள் மூலம் போதைப்பொருள் விற்பனை பரவலாக உள்ளது. இதன் மூலம், போதைப்பொருள் விற்பனையாளர் மற்றும் பயனாளர்களுக்கு இடையிலான தெளிவற்ற தொடர்புகள் ஏற்படுகின்றன.

மேலும், இந்த ஆண்டு ஆகஸ்ட்டு வரையில் 641 வழக்குகளில் 1,965 கிலோ கஞ்சா, 10,634 போதை மாத்திரைகள், 35,500 கிலோ மற்ற மருந்துகள், மெத்தம் பெட்டமைன், ஆம்பெடமைன், கஞ்சா சாக்லேட்டுகள் ஆகியவவை பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் 1,148 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் போதை பொருளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள்

தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் பன்முகமாக நடைபெறுகின்றன. ஆனால், அது ஒரு பெரிய சமூகவியல் பிரச்சினையாகவே உள்ளது. பொதுமக்களின் விழிப்புணர்வு, சிறுவர்களுக்கான கல்வி, மற்றும் அரசின் நிலைத்த செயற்பாடுகளுடன் இந்த பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிக்க முடியும்.

தமிழ்நாடு அரசு போதைப் பொருள் எதிர்ப்பு இயக்கங்களை முன்னெடுத்து வருகிறது. 2019ஆம் ஆண்டில், போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான செயல்திட்டம் (Narcotic Drugs and Psychotropic Substances Act) குறித்த சட்டங்களை கடைப்பிடித்து, போதைப் பொருள் விற்பனையாளர்களை கடுமையாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்றால் முதலில் மதுவை ஒழிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு மதுவை நம்பித்தான் அரசாங்கத்தை நடத்துகிறது என்பது மிக பெரிய குற்றசாட்டு. மதுவை ஒழிக்காமல் குட்கா போன்ற போதை பொருட்களை தடைசெய்வதைக் கொண்டு போதை இல்லாத தமிழகமாக மாற்றமுடியாது.

புத்தாண்டு என்பது நாம் கடந்த வருடம் செய்த தவறுகளை திருத்தவும், புதிய இலக்குகளை நோக்கி செயல்படவும், உதவுவதாக இருக்கலாம். எனவே புத்தாண்டுகளில் ஒவ்வொருவரும் போதை இல்லாத தமிழகமாக மாற்றுவதடுக்கு சபதம் ஏற்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *