நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியது தமிழகத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.அவரின் மீது பல வழக்குகள் பல்வேறு இடங்களில் பதியப்பட்டது.
இது சம்பந்தமாக பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான H. ராஜா, சீமானுக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகாவும், சீமான் பெரியாரை பற்றி பேசிய அனைத்தும் உண்மை எனவும், நாம் தமிழர் தொண்டர்கள் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களிடம் கூறினார்.