உளுந்தூர்பேட்டை அருகே நடந்த கார் விபத்து சம்பவம் தொடர்பாக மதுரை ஆதீனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியானதால் உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மதுரை ஆதீனத்தின் பீடாதிபதிஅவர்கள் தனது காரில் பயணிக்கும்போது, தொப்பி அணிந்த இருவர் “பேரிகார்டை உடைத்துக்கொண்டு, நம்பர் பிளேட் இல்லாத காரில்வந்து தன்னை மோதி கொல்ல முயற்சித்ததாகக் கூறியிருந்தார்.. இது தீவிரவாத சதி” என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தச் சம்பவம் மே 3ம் தேதி, சென்னை காட்டாங்குளத்தூரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டுக்குப் சென்ற போது நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, தருமபுரம் ஆதீனத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி போலீசார் சிசிடிவி காட்சிகளைத் திரட்டியுள்ளனர். அதில் மதுரை ஆதீனம் பயணித்த கார், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக செல்லும் போது, எதிரே மெதுவாக வந்த வெள்ளை கார் ஒன்றுடன் மோதியது தெளிவாக உள்ளது.
“திட்டமிட்ட சதி இல்லை” – போலீசார் விளக்கம்
விபத்து தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இது திட்டமிட்ட தாக்குதல் அல்ல என்றும், காரின் ஓட்டுநரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்துதான் எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும், இதுவரை எந்தவிதமான புகாரும் அளிக்கப்படவில்லை என்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மதுரை ஆதீனம் கூறிய சில தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை எனும் வகையில் தற்போது சிசிடிவி காட்சிகள் மூலம் உண்மை வெளிசத்துக்கு வந்துள்ளது.
இவன் மீது இஸ்லாமிய அமைப்புகள் கட்சிகள் இயக்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் காரை ஏற்றிய என்னை கொலை செய்ய முயற்ச்சித்ததாக பொய்யை பரப்பிய இவன் கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க காவல் துறையிடம் வலியுறுத்த வேண்டும்
காரை மோதிவிட்டு நிற்காமல் ஓடி விட்டதாக பொய்யை பரப்பிய இவனை சும்மா விடக்கூடாது
காவல் துறை வெளியிட்டுள்ள வீடியோவில் இவனை மோதவந்ததாக சொன்ன கார் ஓட்டுனரும் இவனும் சேர்த்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் ஆன பிறகு தான் அந்த கார் சென்று இருக்கிறது இப்படி இருக்கும் போது இவன் வேண்டும் என்ற பொய்யான தகவல்களை பரப்பி இரு பிரிவினருக்கும் இடையே கலவரத்தை உண்டு பண்ணும் நோக்கில் ஊடகங்கள் மூலம் பொய்யை பரப்பிய இவனை இந்திய அரசியல் சாசன சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் செய்யுமா????? தமிழக அரசு ஜெயலலிதா ஆட்சியில் காஞ்சி சங்கராச்சாரியாரை கைது செய்தது போல் இவனயும் கைது செய்ய வேண்டும்