முகலாய பேரரசின் வரலாறுகளை பாடத்திட்டதிலிருந்த நீக்குகிறது மத்திய அரசு

News21 Tamil
Spread the love

7ம் வகுப்பு பாடப் புத்தகத்திலிருந்து ‘முகலாயப் பேரரசு’ வரலாறு பற்றிய நிகழ்வுகளை NCERT (National Council of Educational Research and Training) நீக்கியுள்ளது. அவற்றிற்குப் பதிலாக, மகதம், மௌரியர்கள், சாதவாகனர்கள் மற்றும் சுங்கர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சங்களைப் பற்றிய புதிய நிகழ்வுகளை பாடங்களில் அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

முகலாய பேரரசு இந்தியாவில் சுமார் 1526 முதல் 1857 வரை நீண்டகாலம் ஆட்சி செய்த ஒரு முக்கியமான பேரரசாகும். முகலாய பேரரசின் மன்னர் பாபர், 1526 இல் முதல் பானிபட் போரில் டெல்லி சுல்தானகத்தை தோற்கடித்து பேரரசை நிறுவினார்.

முகலாய பேரரசு தனது ஆட்சியின் போது கலை, கலாச்சாரம், ஆட்சி மற்றும் நிர்வாகம் என பல துறைகளில் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளது. இந்தியாவின் வரலாற்றுசிறப்புமிக்க பல கட்டிகலைகள் முகலாய பேரரசால் அமைக்கப்பேற்றது. மதசா‌ர்ப‌ற்ற அரசாங்கம், நீதமான ஆட்சி போன்றவை இந்தியாவில் மிக நீண்ட கால ஆட்சியமைக்க வலியமைத்தது.

2023 ம் ஆண்டு 12-ம் வகுப்பு பாடத்திட்டதிலிருந்து முகலாயர் வரலாறு, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம், காந்தி படுகொலையில் நாதுராம் கோட்சேவின் பங்கு போன்ற சில குறிப்பிட்ட பகுதிகள் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மகாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் மூண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *