ஆசியக் கோப்பை தொடர், 1984ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில், ஒருமுறை கூட, இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதியது கிடையாது. இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்பொழுது ஆசிய கோப்பை போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அதற்கான பணிகள் முழு விச்சில் நடைபெறுகிறது. இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற இந்தியா & பாகிஸ்தான் அணிகள் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மோத இருக்கின்ற நிலையில் கடுமையான பயிற்சியில் இரு நாட்டு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
41 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக நடைபெற இருப்பதால் இதனால், ஆசியக் கோப்பை இறுதிப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
