Spread the love

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக அவ்வப்போது மருத்துவமனை தகவல் சொன்னது. ஆனால் சிகிக்சை பலன்றி இன்று உயிரிழந்தார்.

பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ஈ.வெ.கி.சம்பத். இவர் தமிழ் தேசியக் கட்சி, தி.மு.க, காங்கிரஸ் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தன் தந்தையான ஈ.வி.கே.சம்பத் பயணித்த அதே காங்கிரஸ் கட்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு நடைப்பெற்ற தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வேட்பாளராக சத்தியமங்கலத்தில் முதல் முறையாக தேர்தலை எதிர்க்கொண்டு, வெற்றிப் பெற்றார். அதன் பின் படிப்படியாக தனது அரசியலில் வளர்ச்சி கண்டார், பின் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக இரு முறை பதவி வகித்தார் என்பது குறிப்பிதக்கது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான இளங்கோவனின் மரணம் குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் சொந்த ஊரான ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கொண்டு சென்று நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பாக்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *