ரிசர்வ் வங்கி புதிய விதிகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது, அதாவது மே 1 முதல் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். தற்சமயம் பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 5 முறை இலவச ஏடிஎம் பரிவர்த்தனை தங்கள் சேமிப்பு கணக்கு வங்கி ஏ டி எமில் எடுத்துக்கொள்ளலாம். அதே போன்று பெருநகரங்களில் ஒரு மாதத்தில் 3 முறை இலவச ஏடிஎம் பரிவர்த்தனை சொந்த சேமிப்பு கணக்கு இல்லாத வங்கியிலும், பெருநகரங்கள் இல்லாத இடத்தில் 5 முறை எடுத்துக்கொள்ளலாம்.
அதற்கு அதிகமாக பணம் எடுக்கும் பட்சத்தில் ரூ.21 கட்டணம் நிர்ணயித்திருந்தது. அதை ரூ. 23 அதிகரிக்கப்பட்டுள்ளது. பேலன்ஸ் சரிபார்ப்பு கட்டணம் ரூ.6-லிருந்து ரூ.7 ஆக அதிகரிக்கிறது.
ஆன்லைன் பரிவர்த்தனைகளின் எதிர்காலம்:
இந்தக் கட்டண உயர்வு, ஏடிஎம் உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவுகளை ஈடுகட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இந்திய மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு கொண்டு செல்வதற்கும், UPI போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கொண்டு செல்வதற்கும் வழிவகுக்கும். இன்று பல கம்பெனிகள் ஆன்லைன் பரிவர்த்தனைக்கு ரூ. 2 முதல் ரூ. 60 வரை பிளாட்பாரம் கட்டணக் வசூலிக்கப்படுகிறது. மக்கள் முழுமையாக மாறினால் இந்த கட்டணம் ரூ. 2 லிருந்து ரூ. 200 வரை வசூலிக்கப்படலாம்.