முகேஷ் அம்பானியின் ஆண்டிலியா வீடு சுமார் 4.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு சுமார் 15,000 கோடியாக கணிக்கப்பட்டுள்ளது. அன்டிலியா கட்டப்படுவதற்கு முன், 2002 ஆம் ஆண்டு அந்த நிலத்தை வக்ஃபு வாரியத்திடமிருந்து, சுமார் ரூ.21 கோடிக்கு முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார்.
முகேஷ் அம்பானி அவரது மனைவி நீதா அம்பானி அவர்களது குழந்தைகளான ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானியின் குடும்பமும் வசித்து வருகிறது. மும்பையில் கும்பலா மலையில் உள்ள ஆடம்பரமான அல்டமவுண்ட் சாலையில் உள்ள இந்த வீட்டில் 27 மாடிகள் உள்ளது.
முகேஷ் அப்மானியின் வீடு இருக்கும் இந்த நிலமானது, கோஜா என்ற சமூகத்தை சேர்ந்த, ஆதரவற்ற மற்றும் ஏழை குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்காக வக்ஃப் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை, கரீம் பாய் இப்ராஹிம் என்பவர் வக்ஃப் வாரியத்திற்கு தானாக முன்வந்து தானமாக வழங்கியதாக கூறப்படுகிறது.
இதன்படி, ஒரு நிலம் வக்ஃபுக்கு கொடுக்கப்பட்டால் அது ஆதரவற்றோர்கள் வீடு கட்டிக்கொள்ளவும், ஆன்மிக பள்ளி தொடங்கவும்தான் எடுத்துக்கொள்ளப்படும். மற்ற தனியார் நிறுவனத்துக்கு கொடுப்பது சட்டப்படி தவறாகும். இதையடுத்து, கரிம்பாய் கோஜோ அறக்கட்டளை, ஏப்ரல் 2002ல் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா கமர்சியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு சுமார் ரூ.21 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. அன்று சில ஊடகங்களில் பேசும்பொருளாக இருந்தது. அதன் பின் மறக்கப்பட்ட செய்தி தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. வக்ஃபு சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து அந்த இடத்தை காலிசெய்யப் போகிறார் என்று சில ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டன.
இது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் வக்ஃபுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அவர் அந்த வீடை காலிசெய்துவிட்டு வெளியேற வேண்டும்.