ரூ. 200 க்கு இன்டர்நெட் வசதி விரைவில் - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
Spread the love

இன்று இணைய வசதி என்பது அத்தியாவசமாகிவிட்டது, குக்கிராமங்கள் முதல் மெட்ரோ சிட்டி வரை அனைவருக்கும் தேவையாகிவிட்டது. இந்நிலையில் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை மூலமாக அணைத்து வீடுகளிலும் இணைய வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

வீடுகளுக்கு 100 Mbps வேகத்தில் 200 ரூபாய் மலிவு கட்டணத்தில் இண்டர்நெட் இணைப்பு வழங்க இருப்பதாகவும், இதற்கிடையில் 4,700 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இண்டர்நெட் வசதி வேண்டும் என விண்ணப்பம் வந்துள்ளதாகவும். அந்த கிராமங்களுக்கு உரிய வசதிகள் இருக்கும் பட்சத்தில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது இணைய சேவைகளை அளிக்கும் நிறுவனங்கள் ரூ.400 முதல் ரூ.1500 வரை கட்டணம் வசூலித்து வரும் நிலையில், இந்த சேவை மக்களுக்கு பயனுள்ளதாகவும், செலவீனங்களை குறைப்பதாகவும் இருக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் அரசு கேபிள் சரிவர இயங்காதாலும், செட் அப் பாக்ஸுகள் வேலைசெய்யாதது போன்ற பல குளறுபடிகளை இருப்பதை போன்று இணையவசதியில் இதுபோன்ற பிரச்சனைகளில் அரசு கவனம் செலுத்தினால் நல்ல வரவேற்பு மக்களிடம் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *