ஒரு கட்சி மாநில அங்கீகாரம் பெற சட்டப்பேரவை தேர்தலில் 6 விழுக்காடு வாக்குகளுடன் 2 சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றிப்பெற வேண்டும். அல்லது மக்களவை தேர்தலில் 6 விழுக்காடு வாக்குகளுடன், ஒரு மக்களவை தொகுதியில் வெற்றிப்பெற வேண்டும். இரண்டும் இல்லாதபட்சத்தில்
சட்டப்பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 விழுக்காடு இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
சமீபகாலமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அசுர வளர்ச்சி அடைந்தது. அதேபோல் மாநாடுகள் நடத்தி அனைவராலும் பேசும் கட்சியானது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னத்தை தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது
நாம் கட்சியிலிருந்து பல நிர்வாகிகள் அவ்வப்போது விலகும் செய்தி வந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகள் பெற்றதை அடுத்து நாம் தமிழர் கட்சியை தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கடிதம் வாயிலாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.