வெளியேறியது தமிழ் தலைவாஸ் 

வெளியேறியது தமிழ் தலைவாஸ் 
Spread the love

புரோ கபடி தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. ஒவ்வொரு அணிகளும் லீக் சுற்றில் 18 போட்டிகளில் பங்குபெறும். இதில் முதல் எட்டு இடங்கள் பிடிக்கும் அணிக்கு மட்டும்தான் அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் ப்ரோ கபடி சீசனில் லீக் சுற்றோடு வெளியேறியிருக்கிறது தமிழ் தலைவாஸ் அணி, விளையாடிய 18 போட்டிகளில் 12 தோல்விகளைச் சந்தித்தது தமிழ் தலைவாஸ்

புள்ளி பட்டியல் 

1.டெல்லி

2.பெங்களூரு

3.ஹைதராபாத்

4.ஹரியானா

5.மும்பை

6.பாட்னா

7.ஜெய்ப்பூர்

8.உத்திரபிரதேசம் 

9.தமிழ்நாடு

10.குஜராத்

11.பெங்களூரு

இந்நிலையில், தங்கள் சீசனின் கடைசி போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் சஞ்சீவ் பலியான், கேப்டன் அர்ஜுன் தேஷ்வால் இருவரும் தங்களால் அணியில் எதுவுமே செய்ய முடியவில்லை என்று கூறினார்கள். தான் பெயரளவிலேயே பயிற்சியாளராக செயல்பட்டுக்கொண்டிருப்பதாக வெளிப்படையாக அறிவித்தார் சஞ்சீவ் பலியான்.

‘பயிற்சியாளர் கையில் எதுவும் இல்லை’

செவ்வாய்க்கிழமை நடந்த ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு எதிராக தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் 12 புள்ளிகளோடு அவர்கள் சீசன் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பின்பு அணியை முன்னேற்ற என்ன மாற்றங்கள் செய்யவேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு தன் கையிலோ அர்ஜுன் கையிலோ எதுவும் இல்லை என்று கூறினார் சஞ்சீவ் பலியான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *