விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் திவ்ய பாசுரம் என்ற பெயரில் இசை நிகழ்ச்சி, நாட்டியஞ்சலி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இளையராஜா சாமி தரிசனத்துக்காக கருவறைக்குல் நுழைய முயன்றார். ஆனால் அங்கு பூசாரிகள் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. இது மிகப்பெரிய சர்சயாகிப்போனது.
பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் “தீண்டாமை திராவிட ஆட்சியில் இன்னும் ஒழிக்கப்படவில்லயா?” ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்க்கு இந்த நிலைமையென்றால் மற்றவர்களுக்கு என்ன சொல்வது என்று சமூக வலைத்தளங்களில் பேசும்பொருளானது. இதற்கு அறநிலை துறையும் இதற்கு ஒரு விளக்கம் கொடுத்தது.
இருந்தபோதிலும் இது சம்மந்தமாக எக்ஸ் (X) தளத்திலத்தில் பதிவிட்டுள்ள இளையராஜா அவர்கள் “என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுய மரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.