100% வரி  இந்தியா மீது அமெரிக்கா காட்டம்

அமெரிக்கா_இந்தியா
Spread the love

வெளிநாடுகளிடம் இருந்து இறக்குமதியாகும் மருத்துவ பொருள்களுக்கு 100% வரி விதித்துள்ளது. இதனால் இந்தியா, சீனா, அயர்லாந்து, ஸ்விசர்லாந்து, ஜப்பான், பிரிட்டன் போன்ற நாடுகள் பாதிக்கபட்டுள்ளன .

சமீபத்தில் இந்தியாவிற்கு 40% வரி விதிப்பு இந்தியாவில் பேசும் பொருளாகி இருந்தது, H-1B விசாவிற்கு பல லட்சம் கூட்டியிருந்தது இந்தியர்களுக்கு பெரும் இடியாக இருந்தது. அதனை தொடர்ந்து இறக்குமதியாகும் மருத்துவ பொருள்களுக்கு 100% வரி என்பது இந்திய பொருளாதாரத்திற்கு பெரும் நெருக்கடியாக இருக்கும் என்றும் வல்லுநர்கள் கணிக்கின்றனர். இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மொத்த மருத்துவ பொருள்களில் 31% அமெரிக்காவிற்க்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவின் மருத்துவ பொருள்களின் ஏற்றுமதி பாதிக்கப்படுகிறது.

இந்தியா கடந்த ஆண்டு ஏற்றுமதி செய்த மொத்த மருத்துவ பொருள்களின் மதிப்பு 2.4. லச்சம் கோடி ரூபாய்.அமெரிக்காவிற்கு மட்டும் 77,138 கோடி ரூபாய்க்கான ஏற்றுமதி செய்துள்ளது.

வரி விதிப்பு கொள்கையால் பல நாடுகளின் பொருளாதரம் பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *