11,000 ஐடி ஊளியர்கள் பணி நீக்கம் 

ACCENTURE
Spread the love

முன்னணி ஐ.டி. நிறுவனங்களின் ஒன்றான ACCENTURE கடந்த 3 மாதங்களில் உலகம் முழுவதும் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. AI-ல் பயிற்சி பெற முடியாத ஊழியர்களை பணிநீக்கம் செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப உலகின் புதிய புரட்சியாக செயற்கை நுண்ணறிவு தளங்கள் மாறிவிட்டன. சாட்ஜிபிடி, குரோக், ஜெமினி ஏஐ என பல்வேறு செயற்கை நுண்ணறிவு தளங்கள் உள்ளன. ஏஐ வருகையால் பல்வேறு துறைகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட தொடங்கியுள்ளன. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்களில் ஏஐ பயன்பாடு அதிகரித்து இருப்பதால், பல ஆயிரம் ஊழியர்களை நீக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. ஐடி துறை மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஏஐ ஆதிக்கம் செலுத்தும் என தெரிகிறது

AI- தொழில் நுட்பம் வளர்ச்சியால் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. குறிப்பாக முன்னணி ஐடி நிறுவனங்களான மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, டிசிஎஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் அதிக அளவில் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

AI தொழில்நுட்பம் பாதிப்புகள்

Artificial Intelligence (AI) என்பது மனிதர்களின் அறிவாற்றலைப் போல செயல்படும் கணினி மற்றும் இயந்திர முறைமைகளை குறிக்கிறது. இன்றைய உலகில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மையமாக AI உள்ளது. அது கல்வி, மருத்துவம், வணிகம், போக்குவரத்து, பாதுகாப்பு என அனைத்து துறைகளிலும் தாக்கம் செலுத்துகிறது.

AI தொழில்நுட்பம் மனித வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி கொண்டது. சரியான கட்டுப்பாடு, ஒழுக்கநெறி மற்றும் சட்டங்கள் இல்லா விட்டாலும் அது அபாயகரமாக மாறும். எனவே, AI-யின் நன்மைகளைப் பயன்படுத்தியும், தீமைகளை கட்டுப்படுத்தியும் சமநிலையுடன் முன்னேறுவதே சமூக முன்னேற்றத்திற்கு அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *