12,261 ஊழியர்களை மொத்தமாக தூக்கும் டிசிஎஸ். டிசிஸ் மீது புகார்!

12,261 ஊழியர்களை மொத்தமாக தூக்கும் டிசிஎஸ். டிசிஸ் மீது புகார்!
Spread the love

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அதன் சமீபத்திய பணி நீக்க நடவடிக்கைகளால் பெரும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. நாசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாயீஸ் செனட் (NITES) எனப்படும் ஐடி ஊழியர்கள் அமைப்பு, இந்த பணி நீக்கங்களை கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கு எதிராக மகாராஷ்டிரா அரசிடம் அந்த அமைப்பு புகார் அளித்துள்ளது.

உலகளவில் சுமார் 2% ஊழியர்களை, அதாவது 12,261 பணியாளர்களை நீக்கும் TCS-ன் முடிவை NITES எதிர்த்து அரசிடம் புகார் செய்துள்ளது. இந்த பணி நீக்கங்கள் சட்டவிரோதமானவை என்றும், TCS தொழிலாளர் சட்டத்தை மீறிவிட்டதாகவும் NITES குற்றம் சாட்டுகிறது. சட்டப்பூர்வமான முறையில் நியாயமான ஆட்குறைப்பு நடைமுறைகளைத் தவிர்ப்பதற்காக, ஊழியர்களை ராஜினாமா செய்ய நிறுவனம் வற்புறுத்தியதாக அவர்கள் புகார் வைத்துள்ளனர்.

டிசிஎஸ் மிரட்டல்!

பணி நீக்கங்களால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மத்திய மற்றும் மூத்த தரநிலை ஊழியர்களாவர். இவர்களில் பலர் 40 மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள். நீண்ட காலமாக இந்த பிரிவில் பணியாற்றுபவர்கள். NITES இந்த பணிநீக்கங்களின் சட்டபூர்வமான மற்றும் தார்மீக அம்சங்களை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களிடமிருந்து நூற்றுக்கணக்கான புகார்களை NITES பெற்றுள்ளது. பணிநீக்க அச்சுறுத்தல்கள், பண பலன்களை மறுத்தல் மற்றும் blacklisting செய்தல் போன்ற பல புகார்கள் இதில் வைக்கப்பட்டு உள்ளன. ஊழியர்களை ராஜினாமா செய்ய சொல்லி மிரட்டி, அவர்களுக்கு பணப்பலன் கொடுக்காமல் இந்த நிறுவனங்கள் ஏமாற்றுவதாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட பலர் 40 மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்கள். இதில் சிலர் மாற்றுத்திறனாளிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர முதல்வர் இந்த பணி நீக்கங்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், ஊழியர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் பணி நீக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், NITES கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில அரசிடம் புகார் அளித்துள்ளது.

டிசிஎஸ், ஆக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட், சேல்ஸ்ஃபோர்ஸ் மற்றும் கூகிள் போன்ற நிறுவனங்கள் திறன் மேம்பாடு மற்றும் செலவுகளைக் குறைக்கும் நோக்கத்துடன் தங்கள் நிறுவனங்களில் மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக அந்த நிறுவனம் பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளன.

டிசிஎஸ் பணி நீக்கங்கள்:

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2025-26 நிதியாண்டில் சுமார் 12,000 ஊழியர்களை, அதாவது உலகளாவிய ஊழியர்களில் சுமார் 2% பேரை பணிநீக்கம் செய்யவுள்ளது. செயற்கை நுண்ணறிவுக்கான தேவையின் அதிகரிப்பால், நிறுவனம் தற்போது மறுசீரமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது என்பதாக தேரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *