இஸ்ரேல் – பலஸ்தீன் போர் பல வருடங்களாக நடந்து கொண்டிருக்கிறது. இ தற்கு முழு காரணம் நெதன்யாகுதான் என்று அவ்வப்போது அந்நாட்டு மக்கள் குற்றம் சாட்டி போராட்டம் நடத்தினர். இது ஒருபுறம் இறுக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது கடந்த 2020ம் ஆண்டு லஞ்சம், ஊழல் மற்றும் நம்பிக்கை மீறல் என்று பல குற்றச்சாட்டுகல் தொடரப்பட்டன. இது தொடர்பான வழக்குகளின் விசாரணையில் இன்று முதன்முறையாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்
இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமி நேதன்யாகு தனக்கு சாதகமான செய்திகளை வெளியிட வற்புறுத்தி செய்தி நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும், வெளிநாட்டு ஒப்பந்தத்தில் தனது சொந்தங்களுக்கு சாதகமாக கொடுத்ததாகவும் நெதன்யாகு மீது ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதை அரசியல் காரணங்களுக்காக சொல்லப்படும் பொய்க் குற்றச்சாட்டுகள் என மறுத்து வந்தார். இதை அந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
