நாம் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டுமானால் அந்த அந்த நாட்டில் உள்ள தூதரகத்தில் பணம் செலுத்தி அல்லது ஆன்லைனில் விசா பெறவேண்டும். ஆனால் இந்தியாவிற்கு ஸ்ரீலங்கா, ஓமான், கத்தார், கஜகஸ்தான் உட்பட 62 நாடுகளுக்கு விசா பெறாமல் இந்தியர்கள் சுற்றுலா சென்று வர முடியும். அந்த பட்டியலில் ரஷ்யாவும் இணைய உள்ளது. விசா இல்லாமல் ரஷ்யாவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி 2025 ஆம் ஆண்டு மார்ச் முதல் இது அமலுக்கு வரலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது வழக்கப்படி நாம் விண்ணப்பித்த நான்கு நாள்களில் இ-விசா வழங்கப்பட்டு வருகிறது. விசா கட்டுப்பாடுகளை எளிமையாக்குவதன் தொடர்பில் இந்திய, ரஷ்ய அதிகாரிகள் ஒன்றுகூடி விவாதித்தனர். அப்போது விசா இல்லாமல் இந்தியர்கள் மாஸ்கோ செல்வதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராயப்பட்டது. முன்னதாகவே ஈரான், சீனா போன்ற நாடுகள் விசா இல்லாமல் ரஷ்யாவிற்கு சென்று வருகின்றன, அதனடிப்படையில் இந்தியாவையும் இணைத்து கொள்ள ரஷ்யா ஆர்வமாக உள்ளது. இதன்மூலம் இரு நாட்டு உறவு மற்றும் சுற்றுலாத்துறை ஊக்குவிக்கப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன. நமது நாட்டிலிருந்து அதிகமாக மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்கு செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
