அம்பேத்கரை சிறுமைபடுத்தி பேச்சுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்

Spread the love

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று பேசினார். அப்போது, எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் பெயரைக் கூறியதற்கு கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்” புண்ணியமாகிருக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த சர்சையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளிடமிருந்து எதிரிப்பு கிளம்பியது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே – அம்பேத்கரை அமித் ஷா அவமதித்ததாக குற்றம் சாட்டி, அவர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அந்த கட்சியின் சார்பாக நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினும் – அமித்ஷாவின் பேச்சைக் கண்டித்து “அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.

நாட்டைப் பற்றியும், மக்களைப் பற்றியும், அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!” எனக் குறிப்பிட்டிருந்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் – தனது எதிர்ப்பை காட்டமாக பதிவு செய்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களைப் பற்றி நாடே பேசுகிறது என்பதை சாவர்க்கரின் வாரிசுகளால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

எவ்வளவு வயிற்றெரிச்சல் அவர்களுக்கு என்பதை அமித்ஷா வெளிப்படுத்தி விட்டார். அவர் தனது முகத்திரையைத் தானே கிழித்துக் கொண்டார். இதுதான் சங்பரிவார்களின் உண்மை முகம்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா – “டாக்டர் அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், நான் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது. கால்நடைகள் மேய்த்திருப்பேன். எங்களின் தலைவர் கார்கே, காங்கிரஸ் தலைவர் ஆகியிருக்க முடியாது. கலபுராகி ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். நீங்கள்கூட உள்துறை அமைச்சர் ஆகியிருக்க முடியாது. ஊரில் காயலான் கடை நடத்தி இருப்பீர்கள். மோடி இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்திருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் – உயிரோடு இருக்கும்போது சோறு தராத கடவுள், செத்த பிறகு சொர்க்கம் தரும் என்பதை எப்படி நம்ப முடியும்? சொர்க்கம் இருக்கிறதா? இல்லையா? என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சொன்னால் வாழும் பூமியையே சொர்க்கமாக மாற்ற முடியும். அதற்காக வாழ்ந்து வழிகாட்டிய பெருந்தகை அண்ணல் அம்பேத்கர் அவர்கள்.

டெல்லியில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகம் முன்பு டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம்ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல தலைவர்கள் சமூக வலைத்தளங்களிமும், ஆர்ப்பாட்டத்தில் வாயிலாகவும் கண்டனக்களை தெரிவித்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *