நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. தமிழகத்தைச் சேர்ந்த தி.மு.க, அ.தி.மு.க எம்பிக்கள் எதிர்த்து வாக்களித்த நிலையில், பா.ம.க எம்பி அன்புமணி வாக்கெடுப்பின்போது வாக்கெடுப்பை புறக்கணித்தார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க வருகின்ற சட்டசபை தேர்தலில் பி.ஜே.பி வுடன் கூட்டணி வைக்க போகிறது என்ற செய்தி பரவலாக பேசப்பட்டநிலையில், அ.தி.மு.க எதிராக வாக்களித்திருப்பது ஆச்சரியமானதாக கருதப்படுகிறது.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக ஜிகே வாசன் வாக்களித்த நிலையில், வாக்கெடுப்பின்போது பங்கேற்காமல் அன்புமணி புறக்கணித்துவிட்டார். அ.தி.மு.க எம்.பி.க்களான தம்பிதுரை, சி.வி. சண்முகம் உள்பட நான்கு எம்.பி.க்களும் மசோதாவுக்கு எதிராக வாக்களித்தனர்.
மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும், எதிராக 232 பேரும் வாக்களித்தனர். இந்த நிலையில், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃபு சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்.பி.க்களும், எதிராக 95 எம்.பி.க்களும் வாக்களித்தனர்.